ஸ்டெர்லைட் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை..!
ஸ்டெர்லைட் ஆலை வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் ஆலையின் உள்ளே இருக்கும் பராமரிப்பு பணியை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று எழுத்துப்பூர்வ பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஸ்டெர்லைட் ஆலை எந்த ஒரு அடிப்படையில் விதிமுறைகளையும் பின்பற்றவில்லை என்றும் கடந்த 22 ஆண்டுகளாக ஆலை இருக்கும் பகுதி மட்டும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சிறப்பு எச்சரிக்கை விடுக்கும் அளவிற்கு ஆலை நடவடிக்கை இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ள தமிழக அரசு ஆலயத்தை திறக்க வேண்டும் என்று தமிழக அரசு அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.





