பழங்குடியின மக்களின் எட்டாக்கனியை நிறைவேற்றிய எம்பி..!
நீலகிரி மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்தாடும் பாறையில் பழங்குடியின கிராமத்திற்கு பேருந்து சேவையை அமைச்சர் ராமச்சந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் காரைக்குடி கிராமமாக அமைந்துள்ள கள்ளம்பாளையம் பழங்குடியின கிராம மக்களுக்கு பேருந்து சேவை என்பது இதுவரை எட்டாக்கனியாகவே இருந்தது. இந்த நிலையில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசாவின் முயற்சியில் கோத்தகிரி இருந்து அரசு பேருந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்து சேவையை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இருவரும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.





