4 வயது குழந்தையை கொன்றுவிட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை..!
ராணிப்பேட்டை அருகே குடும்பத் தகராறு காரணமாக 4 வயது குழந்தையை கொன்றுவிட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிச்சாண்டி கிராமத்தை சேர்ந்த தயாளன், வெண்ணிலா தம்பதிக்கு கீர்த்தி என்ற 5 வயது மகளும் ஹரிதா என்ற மூன்று வயது மகளும் இருந்தனர். தயாளன் குடித்துவிட்டு குடும்ப தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல் தயாளன் குடிபோதையில் வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவர் கீர்த்தியை வீட்டிற்குள் வைத்து கட்டி வைத்துள்ளார். குழந்தையை வெளியே உள்ள மரத்தில் தூக்கில் தொங்க விட்டு கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






