நிச்சயக்கப்பட்ட திருமணம் பாதியில் நின்றதால் பெண்ணின் ஆபாச வீடியோக்களை நண்பர்களுக்கு பகிர்ந்தவர் கைது..!
சென்னை ஓட்டேரியில் நிச்சயக்கப்பட்ட திருமணம் பாதியில் நின்றதால் விரக்தியில் பெண்ணின் ஆபாச வீடியோக்களை நண்பர்களுக்கு பகிர்ந்தவர் போலீசாரால் கைது செய்யப்பட்டான்.
முகமது என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த மாதம் 13ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மாப்பிள்ளை நடத்தை சரியில்லை என கூறி பெண் வீட்டார் திருமணத்தை ரத்து செய்ததோடு வேறு ஒரு இளைஞருடன் திருமணம் நிச்சயம் துள்ளனர்.
ஆத்திரமடைந்த முகமது நிச்சயக்கப்பட்ட போது அந்தப் பெண்ணுடன் வீடியோ காலில் ஆபாசமாக பேசிய வீடியோவை தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் முகமதுவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






