வேகமாக பரவி வரும் மெட்ராஸ் ஐ..!
திருச்சியில் கண்களில் பாதிப்பு ஏற்படுத்தும் மெட்ராஸ் ஐ தொற்று கடந்த சில தினங்களாக வேகமாக பரவி வருகிறது. இவை காற்று மூலமாக பரவக்கூடும்.
மெட்ராஸ் ஐ எளிதில் குணப்படுத்தக்கூடிய மிக சாதாரணமான நோய்த்தொற்று தான் என்றும் அதனை முதலிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.





