மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடந்த கூட்டம்..!
நாட்டின் கடலோர பாதுகாப்பை அசாத்தியமானதாக மாற்ற வேண்டும் என மத்திய அமைச்சர் அமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் நாடு முழுவதும் உள்ள புலனாய்வு பிரிவு அதிகாரிகளில் உயர்மட்ட கூட்டத்திற்கு தலைமை தாங்கி நாட்டின் உள் பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்தார்.
டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பயங்கரவாத எதிர்ப்பு, சைபர் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள், எல்லை தொடர்பான அம்சங்கள் என பல விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன. நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் பாதுகாப்பின் அனைத்து அம்சங்களையும் பலப்படுத்துவதன் மூலம் தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதாக கூறினார்.
கடந்த எட்டு ஆண்டுகளில் உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்த முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.





