--- --:--:-- --

தலைக்கேறிய போதையால் இளைஞர்கள் செய்த வெறிச்செயல்..!

7

தூத்துக்குடியில் கஞ்சா போதையில் நான்கு பேர் சேர்ந்து இளைஞரை கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். ராஜீவ் நகரை சேர்ந்த முனீஸ்வரன் என்று இளைஞர் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

 

அப்பொழுது மேலூர் ரயில் நிலையம் அருகே கஞ்சா போதையில் வந்த நான்கு பேர் அவரை வழிமறித்து கொலை வெறி தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓடினர்.

 

இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட சிவானந்தரமூர்த்தி மற்றும் ராம்குமார் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

 

Right Menu Icon