திருப்பூரில் ஜல்லிக்கட்டு தேதி அறிவிப்பு
திருப்பூர் மாவட்டம் அழகுமலை பகுதியில் கோவிட் தொற்று ஊரடங்கிற்கு முன்பு மூன்று ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வந்தது.
பின்னர் ஊரடங்கிற்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு பிப்ரவரி 9ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என ஜல்லிக்கட்டு பேரவை துணைச் செயலாளர் பவித்ரா அர்ச்சனன் தெரிவித்துள்ளார்.





