வனிதா தாடி பாலாஜி உடன் திருமணம் செய்து கொள்ள போகிறாரா..?
நடிகை வனிதா தாடி பாலாஜி உடன் திருமணம் செய்து கொள்ள போகிறாரா எனும் கேள்வி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வனிதா தாடி பாலாஜியுடன் இருக்கும் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மாலை மாற்றிக் கொள்வது போன்ற படத்தை பதிவிட்டிருந்தார். இதனால் இருவருக்கும் திருமணமாகி விட்டது என்ற தகவல் தொடர பின் பரபரப்பாகி பிரஸ்மீட் வைத்து மறுக்கும் அளவிற்கு சென்றது.
அந்த செய்தியாளர் சந்திப்பில் 4 என்ன 40 கல்யாணம் கூட செய்து கொள்வேன் என்று காட்டமாக கூறி பரபரப்பை எழுப்பினார். அந்த பரபரப்பு அடங்கும் முன்னரே அடுத்த பரபரப்பு வந்துவிட்டது. தன்னுடன் தாடி பாலாஜி புன்னகைத்து எடுத்துக்கொண்ட போட்டோவையும் தாடி பாலாஜி கைநீட்டி சிரித்தபடி ஏதோ சொல்வது போல உள்ள போட்டோவையும் பதிவிட்டுள்ளார்.
இதுவே ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த போட்டோவை பார்த்த ரசிகர் ஒருவர் சிறந்த ஜோடி என்றும் மற்றொரு ரசிகர் எப்போது திருமணம் எனவும் கேட்டுள்ளனர்.






