--- --:--:-- --

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்த 9 மாவட்டங்களில் இன்று மறைமுகத் தேர்தல்..!

1

ரக உள்ளாட்சி தேர்தல் நடந்த 9 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

 

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

 

இந்த ஒன்பது மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், 74 ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், துணைத் தலைவர்கள் சுமார் 3 ஆயிரத்து கிராம ஊராட்சித் துறை தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது.

 

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பதவி ஏற்றுக் கொண்டவர்கள் மட்டும் இந்த தேர்தலில் போட்டியிடவும், வாக்களிக்கவும் முடியும். இந்த மறைமுக தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறை மாநில தேர்தல் ஆணையத்தில் உள்ளது.

 

தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு உள்ள இடத்தில் தான் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் வேறு இடத்தில் நடத்தினால் அது செல்லாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மைக்கு குறைவான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வந்திருப்பின் தேர்தல் நடத்தக்கூடாது என்றும் பெரும்பான்மை உறுப்பினர்களின் வருகைக்காக 30 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

30 நிமிடங்களுக்கு பிறகு போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வரவில்லை என்றால் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Right Menu Icon