--- --:--:-- --

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானு..!

8

டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு முதல்நாளிலேயே வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நேற்று கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

இந்த நிலையில் முதல் நாளான இன்று 49 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்ட இந்தியாவின் மீராபாய் சானு 2 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கம் வென்றார். உஸ்பெகிஸ்தான் வீராங்கனையை வீழ்த்தி அவர் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

 

மேலும் வெள்ளி பதக்கம் பெற்ற மீராபாய் சானுக்கு பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon