--- --:--:-- --

வைபவ் சூர்யவன்ஷியை காத்திருக்க வைக்கும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்..!

3

ந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில், 15 வயதான இளம் சாதனையாளர் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) இந்திய அணியில் சேர்க்கப்படாதது தற்பொழுது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 2026 ஐபிஎல் தொடரில் 16 இன்னிங்ஸ்களில் 776 ரன்கள் குவித்து, அந்தத் தொடரின் மதிப்புமிக்க வீரராக (MVP) தேர்ந்தெடுக்கப்பட்ட சூர்யவன்ஷி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.

 

 

இருப்பினும், அயர்லாந்து தொடரில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்த போட்டியில் இந்திய அணி தொடரை இழந்தது. இதேபோன்று நேற்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலும் அவருக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

 

 

இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறுகையில், இந்தத் தொடர் காத்திருப்பு வைபவ் சூர்யவன்ஷிக்கு கூடுதல் அழுத்தத்தை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார். தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போது உடனடியாக திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு அவர் தள்ளப்படுவார் என்றும், அதே சமயம் 15 வயதில் இந்த அழுத்தங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் அவர் கூறினார்.

 

 

மேலும், இந்திய அணியின் முன்னணி வீரர்களுடன் இணைந்து பயணிப்பது அவருக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும் என்றும் கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை இந்தத் தொடரின் அடுத்தடுத்த போட்டிகளில் சூர்யவன்ஷி களம் இறங்கினால், சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதில் (15 ஆண்டுகள் 96 நாட்கள்) அறிமுகமான வீரர் என்ற சாதனையை ஏற்படுத்துவார்.

 

 

இந்தியாவின் சச்சின் டெண்டுல்கரின் (16 ஆண்டுகள் 205 நாட்கள்) சாதனையையும் முறியடித்து, இந்திய சீனியர் அணியில் விளையாடிய மிக இளம் வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.

Leave a Reply

Right Menu Icon