சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி கலைஞரின் உருவப்படம் திறப்பு..!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் உருவப்படம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்கள் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு இதனை அறிவித்துள்ளார்.
ஆகஸ்ட் இரண்டாம் தேதி கலைஞரின் உருவப்படம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெறும் எனவும் அப்பாவு அறிவித்துள்ளார். சிறப்பு நிகழ்ச்சிக்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,






