கடவுள் அளித்த மறுஜென்மம் என்று உருக்கத்துடன் கூறியுள்ள அர்ச்சனா..!
பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா தலைமையில் நடந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு கடவுள் அளித்த மறுஜென்மம் என்று உருக்கத்துடன் கூறியுள்ளார். கடந்த ஜூலை 10 ஆம் தேதி பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.
அதில் அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பது போன்ற இரண்டு புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. மேலும் அந்த பதிவில் தான் எப்பொழுதும் மனது கூறுவதை கேட்டு நடப்பவள் என்றும் இதனால் சற்று கோபமடைந்த தனது மூளை உன் மனதை விட நான் தான் பெரியவன் என்று காட்ட தொடங்கி இருப்பதாகவும் இதனால் கொஞ்சம் தொல்லை கொடுப்பதாகவும் கூறியிருந்தார்.
மேலும் தன் தலையின் மூளைக்கருகே சிறிய துளை இருப்பதாகவும் அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது என்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் தெரியவந்ததாகவும் இதன் மூலம் தனக்கு மூளை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் நகைச்சுவையாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதோடு இன்று தனது அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது என்றும் அர்ச்சனா குறிப்பிட்டிருந்தார். அறுவை சிகிச்சையிலிருந்து நல்ல படியாக மீண்டு வர தனக்காக பிரார்த்தித்துக் கொள்ளுமாறும் அர்ச்சனா உருக்கத்துடன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அவர் குறிப்பிட்ட நாளில் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. கிட்டத்தட்ட 14 நாட்களுக்கு பிறகு அர்ச்சனா மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளார். தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.






