--- --:--:-- --

வாத்து பண்ணையில் சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை..!

5

புதுச்சேரியில் இரண்டு வருடங்களாக வாத்து மேய்க்கும் 5 சிறுமிகளை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போஸ்கோ சட்டத்தின்கீழ் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

சாத்த மங்கலத்தை சேர்ந்த கண்ணியப்பனிடம் இருக்கும் வாத்துக்களை தமிழகத்திலிருந்து கொத்தடிமைகளாக வந்து பதினைந்து பேர் மேய்ப்பதாகவும் அதிலிருக்கும் சிறுமிகள் பாலியல் ரீதியில் கொடுமைபடுத்தப்படுவதாகவும் மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

விசாரணையில் ஐந்துக்கும் மேற்பட்ட சிறுமிகள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டதும் அதில் ஒரு சிறுமி கர்ப்பம் அடைந்து பிறகு கலைக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறுமிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

மேலும் தலைமறைவாக உள்ள வாத்து பண்ணையாளர் உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon