--- --:--:-- --

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்..!

8

ளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இன்று முதல் வரும் 6-ஆம் தேதி வரை புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழை வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon