--- --:--:-- --

மயக்க ஊசி போட்டு பணம் பறித்த வழக்கில் 2 பேர் கைது..!

7

யக்க ஊசி போட்டு உளவுத்துறை தலைமைக் காவலரை கடத்தி பணம் பறித்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை சூளைமேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி.

 

உளவுத்துறை தலைமை காவலராக சென்னை டிஜிபி அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த இவரை கடந்த 28 ஆம் தேதி ஒருவர் காரில் அழைத்து சென்றுள்ளார். அப்போது காரில் இருந்து மேலும் 2 பேர் மயக்க ஊசி செலுத்தி அவரின் வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

 

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய நிஷாந்த் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon