--- --:--:-- --

ரிலீஸ் ஆனது அஜித்தின் குட் பேட் அக்லி?

3

ஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், அது தொடர்பான விமர்சனங்களை நெட்டிசன்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இந்தப் படத்தில் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.

 

அண்மையில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ரசிகர்களின் ‘நாஸ்டால்ஜியா’ அனுபவத்துக்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் படத்தில் இருப்பதை ட்ரெய்லர் காட்சிகள் உணர்த்தின.இந்நிலையில் இன்று திரையரங்குகளில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாகியுள்ளது. வெளிநாடுகளில் படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டு எக்ஸ் தளத்தில் ரசிகர்களின் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.

 

படத்தின் முதல் பாதி சிறப்பாக இருப்பதாகவும், இன்டர்வல் காட்சி அட்டகாசமாக இருப்பதாகவும் ரசிகர் ஒருவர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.மேலும் படம் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் எனவும், மற்ற பார்வையாளர்களுக்கு பேட் ஆக இருக்கும் எனவும் நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார்.

 

படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் என்று ரசிகர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.படம் சிறப்பாக இருப்பதாக நெட்டிசன் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். ரசிகர்களுக்கு நிச்சயம் படம் பிடிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.நீண்ட நாட்களுக்குப் பிறகு திருப்திகரமான படம் பார்த்ததாக ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

படம் ‘மாஸ்’ ஆக இருப்பதாக ரசிகர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். ‘மங்காத்தா’ படத்துடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.படத்தில் பாசிட்டிவ், நெகட்டிவ் என்ன என்பது குறித்து விஜய் ரசிகர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Right Menu Icon