பள்ளியில் மாணவர்களுக்கு முடித் திருத்தம்..தலைமை ஆசிரியரின் ஏற்பாடு..!
திருவள்ளூர் மாவட்டம் கீழடிப்பூண்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஸ்டைலாக சுற்றித்திரிந்த மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் ஏற்பாட்டில் அழகு கலை நிபுணர் உதவியுடன் முடி திருத்தம் செய்யப்பட்டது.
இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் ஆசிரியரின் அறிவுறுத்தலை கேட்காமல் தங்களது முடி அலங்காரத்தை மாற்றிக் கொள்ளாமல் ஸ்டைல் ஆக வந்திருந்தனர்.
இதனையடுத்து தலைமையாசிரியர் ராமமூர்த்தி ஒவ்வொரு வகுப்புக்கும் சென்று சகிக்க முடியாத சிகை அலங்காரத்துடன் இருப்பவர்கள் மற்றும் இதுவரை முடி வெட்டாமல் இருப்பவர்கள் என நூறுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை தேர்வு செய்தார்.
பின்னர் அவர்கள் அதை பெற்றோர்களிடம் செல்போனில் ஒப்புதல் பெற்று அனைவருக்கும் பள்ளி மைதானத்தில் முடி திருத்தம் செய்யப்பட்டது. இதனிடையே முடி திருத்தம் செய்ய வந்த சலூன் கடைக்காரரின் தலைமுடி முகம் முழுவதும் பரவியிருந்ததால் அவரால் ஒழுங்காக முடிபட்ட முடியவில்லை.
இதனை கண்ட மாணவர்கள் சிலர் கிண்டல் செய்ததால் அந்த நபர் தனது தலைமுடியை ரப்பர் பேன்டால் கட்டிக்கொண்டு முடி திருத்தம் செய்தார்.





