கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்.. கைவிரல் பதிவு கட்டாயம்..!
மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயன்பெற கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து நியாய விலை கடைகளிலும் இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.
வரும் 17ஆம் தேதிக்குள் அனைத்து நியாய விலை கடைகளிலும் கைவிரல் ரேகை பதிவு கருவி இருப்பதை உறுதி செய்யவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.





