அனைவருக்கும் அரசு வேலை; மதுக்கடைகள் மூடல், கள்ளுக்கடைகள் திறப்பு – சீமான் உறுதி
தமிழகத்தை உயர்த்துவேன் என உறுதியளித்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாநிலத்தில் வேலை இல்லாத நிலையை முழுமையாக ஒழிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், யாரும் வேலை இன்றி தவிக்கும் சூழ்நிலை இருக்காது என்றும் கூறினார். மேலும், தமிழகத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வேன் எனவும் வாக்குறுதி அளித்தார். அதேசமயம், தற்போதைய மதுக்கடைகளை மூடி, அதற்குப் பதிலாக கள்ளு கடைகளை திறப்பேன் என்ற சர்ச்சைக்குரிய கருத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.





