தமிழகத்தில் இனி மஞ்சள் நிறத்தில் அரசு பேருந்துகள்..!
சீரமைக்கப்படும் பேருந்துகளுக்கு மஞ்சள் நிற பெயிண்ட் அடிக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு போக்குவரத்து துறை கழகப் பயணிகளுக்கு சிறப்பான சேவையை வழங்கும் நோக்கத்தில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் படி தற்போது ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்காக சேதமடைந்த பழைய பேருந்துகளை சரி செய்யும் பணி நடைபெற்று வருகின்றன.
தற்போது சீரமைக்கப்பட்டு வரும் பேருந்துகளில் பழைய வண்ணம் மாற்றம் செய்யப்பட்டு மஞ்சள் நிறம் அடிக்கப்பட்டு வருகிறது.





