--- --:--:-- --

நண்பன் மனைவியுடன் உல்லாசம்.. கொலை செய்த கணவன்..!

10

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே மனைவியுடன் தகாத உறவில் இருந்ததாக கூறி நண்பரை கொலை செய்த இளைஞர் தாமாகவே முன்வந்து போலீசில் சரணடைந்துள்ளார்.

 

போடிநாயக்கனூர் அருகே சில மரத்தப்பட்டியில் மீன் கடை நடத்தி வந்தவர் ஜெயபிரகாஷ் இவர் தனது நண்பனை ராசிங்கபுரத்தில் வைத்து கொலை செய்வதாக கூறி போடி காவல் நிலையத்தில் சரணடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இதனையடுத்து ராசிங்கபுரத்தில் இறுதி நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தகவல் தெரியப்படுத்தி விசாரணை நடத்திய பொழுது நபர் ஒருவர் கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜெயப்பிரகாஷ் கொலை செய்யப்பட்ட கருப்பு சாமியும் நண்பர்களாக இருந்தது தெரியவந்தது.

 

ஜெய பிரகாஷின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்து கொண்டிருந்த கருப்பசாமி ஜெயப்பிரகாஷின் மனைவியுடன் தகாத உறவில் இருப்பதாக கூறி அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

ஆத்திரமடைந்த ஜெயபிரகாஷ் கருப்பசாமியை மது அருந்த அழைத்து கொலை செய்திருந்தது தெரியவர தாமாகவே முன்வந்து போலீசில் சரணடைந்த ஜெயப்பிரகாஷை போலீசார் சிறையில் அடைத்தனர்.

 

Right Menu Icon