விளையாடி கொண்டிருந்த சிறுமி மீது மோதிய அரசு பேருந்து..!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அரசு பேருந்து மோதியதில் 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பழையபாளையம் பகுதியை சேர்ந்த தேவதர்ஷினி என்ற 4 வயது சிறுமி சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற அரசு பேருந்து சிறுமி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சிறுமி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவம் பற்றி தகவல் அறிந்து போலீசார் அந்த சிறுமியின் சடலத்தை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






