--- --:--:-- --

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை..!

3

மார்ச் மாதம் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை வரலாற்றிலேயே முதல் முறையாக தங்கம் விலை மாற்றம் செய்யப்பட்டு அதிரடியாக உயர்ந்தது. அதே போல தான் ஏப்ரல் மாதத்தின் முதல் நாளும் அதிரடியாக தங்கம் விலை உயர்ந்தது. தொடர்ந்து நேற்று முன் தினம் ஒரே நாளில் மட்டுமே 2 முறை தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. இதையடுத்து நேற்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.

 

நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,850க்கும் சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,10,800க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது நகை பிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,950க்கும் சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,11,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,635க்கும் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.93,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.255க்கும், ஒரு கிலோ ரூ.2,55,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon