--- --:--:-- --

சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரம்.. மருத்துவர்களிடம் தீவிர விசாரணை..!

5

16 வயது சிறுமி கரு முட்டை விற்பனை குறித்து மருத்துவர்களிடம் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கருமுட்டையை தனியார் மருத்துவமனையில் விற்பனை செய்த வழக்கில் சிறுமியின் தாய், வளர்ப்புத் தந்தை உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உரிய ஆவணங்களுடன் விசாரணைக்கு ஆஜராகும்படி தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அது காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

 

இதையடுத்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறையும் சிறப்பு மருத்துவக் குழுவும் 10 மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இரவு 8 மணியுடன் விசாரணையை முடித்துக்கொண்டு அதிகாரிகள் என்றும் தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளனர்.

 

Right Menu Icon