பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை..!
அசாம் மாநிலத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன மழை வெள்ளத்தால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிலச்சரிவு உள்ளிட்ட விபத்துக்களில் சிக்கி 5 பேர் இறந்துள்ளனர்.
அசாம் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது .குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ஏராளமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சாலைகள் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 2 குழந்தைகள் உட்பட 5 பேர் இறந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.





