கொடூரமாக வெட்டிக் கொலை செய்த 20 பேர் கொண்ட கும்பல்..!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே சரித்திர பதிவேடு குற்றவாளியை கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ரவுடி சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது 3 கொலை வழக்குகள், இருபத்தி எட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
அரசு மதுபான கடை அருகே சட்டவிரோதமாக இவர் பார் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல தனது கடையை திறந்து வியாபாரம் செய்துள்ளார் .
அப்போது அங்கு மறைந்து இருந்த சுமார் 20 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் அவரது சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.





