24 மற்றும் 25 ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு..!
கேரளாவில் கொரொனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை அடுத்து வருகிற 24 மற்றும் 25 ஆம் தேதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பக்ரீத் பண்டிகை கேரளாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்தவாரம் அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றை கட்டுப்படுத்த வரும் வெள்ளிக்கிழமை 3 லட்சம் கொரொனா பரிசோதனை நடத்த கேரள மாநில சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது இந்திய அளவில் பதிவான கொரொனா விகிதத்தில் 42 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.






