--- --:--:-- --

நடிகர் விஜய் மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை..!

8

டிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் கார் தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்ற அமர்வு இன்று விசாரணை நடைபெற இருக்கிறது.

 

தனி நீதிபதி விதித்த ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் தன்னைப் பற்றி தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விமர்சனங்களை நீக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். தனி நீதிபதியின் தீர்ப்பு நாளில் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு பட்டியலிட கோரி விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

நீதிபதி சுந்தரேஷ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது இந்த மனுக்களை வரி தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் மேல்முறையீடு அமர்வுக்கு மாற்ற பதிவு துறை உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் நடிகர் விஜய் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

Leave a Reply

Right Menu Icon