--- --:--:-- --

ஏ.ஆர் ரகுமானை இழிவுபடுத்தி பேசிய நடிகர் பாலகிருஷ்ணா..!

6

பிரபல தெலுங்கு நடிகர் தஞ்சம்கோரி பாலகிருஷ்ணா இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானை இழிவுபடுத்தி பேசியது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

 

ஒரு தனியார் தெலுங்கு ஊடகத்திற்கு பேட்டி அளித்த பாலகிருஷ்ணா ஏ ஆர் ரகுமான் பற்றிய கேள்விக்கு அவர் ஆஸ்கார் விருது வாங்கி இருக்கலாம் எனவும் ஆனால் அவர் யார் என்றே எனக்கு தெரியாது எனவும் பாரத ரத்னா போன்ற விருதுகளை என்டிஆரின் கால் விரலுக்கு சமூக எனவும் குறிப்பிட்டுள்ளார் .

 

மேலும் எந்த ஒரு உயரிய விருதும் தன்னுடைய குடும்பம் தெலுங்கு திரையுலகிற்கு செய்த நன்மைக்கு ஈடாகாது எனவும் அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியதோடு பாலகிருஷ்ணாவின் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

 

பாலகிருஷ்ணா தன் படங்களுக்கு இசையமைக்க ஏ ஆர் ரகுமானை அணுகியதாகவும் அவர் மறுத்ததால் எழுந்த காழ்ப்புணர்ச்சியால் இப்படி பேசி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon