ஹூப்ளி – காரைக்குடி இடையே முதல் முறையாக சிறப்பு ரயில் இயக்கம்..!
கோடைகாலம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தென்மேற்கு ரயில்வே, கர்நாடக மாநிலம் ஹூப்ளி மற்றும் காரைக்குடி இடையே சிறப்பு ரயிலை நாளை மற்றும் நாளை மறுநாள் ஏப்ரல் 28 மற்றும் ஏப்ரல் 29இல் இயக்க உள்ளது. அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
ரயில் எண் 07389/07390 ஹூப்ளி – காரைக்குடி சிறப்பு ரயிலை இந்த வாரம் மட்டும் இயக்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த சிறப்பு ரயிலானது ஏப்ரல் 28 அன்று ஹூப்ளியில் இருந்தும், ஏப்ரல் 29 அன்று காரைக்குடியில் இருந்தும் இயக்கப்பட உள்ளது.
ஹூப்ளியில் இருந்து நாளை (ஏப்ரல் 28) காலை 6.30 மணிக்கு புறப்படும் ரயிலானது, காரைக்குடிக்கு சனிக்கிழமை நள்ளிரவு 12.35 மணிக்கு வந்து சேரும்.





