--- --:--:-- --

சத்தியமங்கலத்தில் நண்பரை இரும்பு ராடால் அடித்தே கொன்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர்..!

6

ரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சாணார்பதி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் தனியார் பள்ளி ஒன்றில் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.

 

இந்த தம்பதிக்கு 13 வயதில் மகள் ஒருவர் உள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற மாரிமுத்து மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

 

இந்த நிலையில் அவர் சத்தி – கோவை சாலையில் உள்ள குடோன் அருகே பலத்த காயத்துடன் உயிரிழந்து கிடந்துள்ளார். இது குறித்து தெரிய வந்ததும் சத்தியமங்கலம் காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் மாரிமுத்து பலமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

 

பின்னர் மாரிமுத்துவின் உடலை காவல்துறையினர் கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர்.

Right Menu Icon