மத்திய பட்ஜெட் 2021- 2022 ஆம் ஆண்டின் முக்கிய அம்சங்கள்..!
மத்திய பட்ஜெட் 2021- 2022 ஆம் ஆண்டின் முக்கிய அம்சங்கள் என்னவென்றால் வேளாண் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நெல்லுக்கான குறைந்த விலை இரட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 16.5 லட்சம் கோடிக்கு விவசாய கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. பாரத் பெட்ரோலியம் ஏர் இந்தியா பங்குகளை விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 100 சைனிக் பள்ளிகள் உருவாக்கப்படும் என்றும் 15 ஆயிரம் பள்ளிகள் தரம் மேம்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மின்னணு பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க 1500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பை டிஜிட்டல் முறையில் நடத்த 3 ஆயிரத்து 778 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
75 வயதானவர்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கத்திற்கான இறக்குமதி வரி 12.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.





