பேருந்தில் எடுத்து செல்லப்பட்ட ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய்..!
தெலுங்கானா மாநிலத்தில் ஓடும் பேருந்தில் எடுத்து செல்லப்பட்ட ஒரு கோடியே 10 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணா மாவட்டம் கோட்டா என்ற இடத்திலிருந்து விஜயவாடாவுக்கு சென்ற பேருந்தை நடுவழியில் போலீசார் சோதனையிட்டனர்.
அப்போது ஒருவர் எடுத்து சென்ற ஒரு கோடியே 10 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். நிலங்களை விற்று பணத்தை எடுத்து செல்வதாக பணத்தின் உரிமையாளர் தெரிவித்த போதிலும் முறையான ஆவணங்கள் இல்லாததால் வருமானவரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.







