வேளாண் சட்டங்களுக்கு எதிராக 37வது நாளை எட்டியுள்ள விவசாயிகளின் போராட்டம்..!
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் 37வது நாளை எட்டியுள்ள நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டத்தை தொடர விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
அவர்களின் தொடர் போராட்டம் காரணமாக தலைநகர் டெல்லி ஸ்தம்பித்துள்ளது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர் தோல்வியில் முடிந்து வருகின்றன.
வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு உறுதியாக உள்ள நிலையில் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகளும் உறுதியாக உள்ளனர்.
இந் நிலையில் விவசாயிகள் தொடர் போராட்டம் 37வது எட்டியுள்ள நிலையில் ஏழு கட்ட பேச்சுவார்த்தை வரும் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.






