கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டியின் குடும்பத்தார் பரிசோதனை செய்து கொள்ள மறுப்பு..!
சேலத்தில் கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டி ஒருவரின் குடும்பத்தினரை பரிசோதனை செய்ய அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் அவர்கள் வாக்குவாதம் செய்த காட்சி வெளியாகியுள்ளது.
சேலம் நான்கு ரோடு அருகே உள்ள பெரம்பூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரொனா தொற்றால் ஒரு வயதான மூதாட்டி உயிரிழந்தார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஆண் பெண் என நான்கு பேரை கொரொனா பரிசோதனை செய்து கொள்ள வருமாறு மாநகராட்சி அதிகாரிகள் அழைத்தனர்.
ஆனால் அவர்கள் பரிசோதனைக்கு வர மறுத்து வாக்குவாதம் செய்துள்ளனர். உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள் என போலீசாரிடம் அவர்கள் சவால் விடுத்து உள்ளனர்.






