--- --:--:-- --

தமிழ்நாட்டின் 25 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை..!

1

ரூர் மாவட்டத்தில் அரசு ஒப்பந்ததாரர், மெஸ் உரிமையாளர்கள் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் 80 அடி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.எஸ். சங்கர் ஆனந்த் என்பவரின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 

4 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த குடியிருப்பின் எதிரே ஷெட்டில் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மாயனூர் மாரியம்மன் கோயில் தெரு அருகே உள்ள சங்கர் ஆனந்தின் பெற்றோர் தங்கியிருக்கும் வீட்டிலும் சோதனை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர்.

 

இரண்டு வாகனங்களில் 5 அதிகாரிகள் வந்த நிலையில், அந்த வீட்டின் கதவு திறக்கப்படாததால் அவர்கள் அங்கேயே காத்திருக்கின்றனர்.கரூர் ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் மணி என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் பாதுகாப்புடன் 4 அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதேபோல கோதை நகர் பகுதியில் உள்ள சக்தி மெஸ் கார்த்திக் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இங்கும் 4 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.இதேபோல், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதுமட்டுமின்றி, தியாகராய நகரில் உள்ள ACCORD DISTILLERS & BREWERS PRIVATE LIMITED உள்ளிட்ட 7 இடங்களில் அமலாக்கத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அதேபோல், சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் அம்பத்தூர் அலுவலகத்திலும் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. இப்படி சென்னை, கரூர் என தமிழ்நாட்டில் மொத்தம் 25 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Right Menu Icon