சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் துர்கா ஸ்டாலின் தரிசனம்..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள பழமையான கோயிலில் வழிபாடு நடத்தினார். ஞாயிறன்று திருச்செந்தூர் சென்றவர் அந்த கடலில் கால்நனைத்துவிட்டு புகழ் மிக்க முருகன் கோயிலில் தரிசனம் செய்தார்.
இன்று தொடர்ச்சியாக சுசீந்திரத்தில் உள்ள பழமையான சுவாமி கோயிலுக்கு சென்றார். அங்கு மூலவரான தாய் சுவாமிக்கு நடத்தப்பட்ட சிறப்பு பூஜைகளில் துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டார்.
மேலும் அங்கு கொண்டாடப்பட்ட அனுமன் ஜெயந்தி விழாவிலும் அவர் கலந்து கொண்டார். அப்பொழுது 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலைக்கு வெற்றிலை மாலையும், துளசி மாலையும் சாத்தி வழிபாடு நடத்தினார்.





