--- --:--:-- --

வீட்டிலிருந்து வெளியே எங்கும் செல்ல கூடாது: “ரூ,10 லட்சம் மோசடி வழக்கில் பெண் காக்கிக்கு நிபந்தனையுடன் ஜாமீன்!” உயர்நீதிமன்றம் மதுரை கிளை  உத்தரவு!!

fd

துரை, புறநகர் காவல் நிலையமான நாகமலை புதுக்கோட்டை காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணி செய்த வசந்தி, இவர் கடந்த மாதம் கூலி தொழிலாளியிடம் பத்து லட்சம் மோசடி செய்ததாக நீதிமன்ற உத்தரவு படி கைது செய்து சிறையில் அடைத்தது. இதனை அடுத்து அவர் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்து இருந்தார், இரண்டு முறை ஜாமீன் கொடுக்க நீதிபதி மறுத்த நிலையில்,  நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.

 

அதில்,வீட்டில் இருந்து வெளியே எங்கும் செல்ல கூடாது என மதுரை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.கடந்த மாதம் கூலி தொழிலாளியிடம் ரூ.10 லட்சம்பணம் பறிப்பு மோசடி வழக்கில் பெண் இன்ஸ்பெக்டருக்கு கடும் நிபந்தனையுடன் 3 நாட்கள் ஜாமீன் வழங்கியுள்ளது.

 


மதுரை: கூலித் தொழிலாளியிடம் ரூ.10 லட்சம் பறிப்பு மோசடி வழக்கில் பெண் இன்ஸ்பெக்டருக்கு ஐகோர்ட் கிளை கடும் நிபந்தனையுடன் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. மதுரையை சேர்ந்த பெண் காவல் ஆய்வாளர் வசந்தி ஐகோர்ட் மதுரை கிளையில் ஜாமீன் கோரி செய்த மனுவில், “மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தேன். ஜூலை மாதம் கூலித் தொழிலாளியிடம் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்ததாக, என் மீது தொடரப்பட்ட வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

 

அப்போது மனுதாரர் தரப்பில், ‘மனுதாரரின் இல்ல நிகழ்ச்சிக்காக (பூ புனித நீராட்டு விழா) கல ந்து கொள்ள வேண்டும். எனவே ஜாமீன் வழங்க கோரிக்கை வைக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: காவல் ஆய்வாளர் வசந்திக்கு 3 நாட்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங் கப்படுகிறது. உரிய காவல்துறை பாதுகாப்புடன் இருக்க வேண்டும், மேலும் வீட்டில் இருந்து வெளியே செல்லவோ, செல்போன் .பேசவோ, உபயோகிக்கவோ, மற்ற நபர்களுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு கொள்ள கூடாது. முக்கியமாக, மனுதாரர் காவல்துறைக்கு முழுஒத்துழைப்பு அளிக்க வேண் டும் என உத்தரவிட்டு, விசாரணையை அக்.7க்கு ஒத்திவைத்தார்

Right Menu Icon