--- --:--:-- --

மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள் – மோடி குற்றச்சாட்டு

1

மிழ்நாட்டில் மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் மறைக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். தடைகளை தாண்டி தமிழ்நாட்டில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தியே தீருவோம் என்றும் பிரதமர் சூளுரைத்தார்.

 

இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி இன்று தூத்துக்குடிக்கு வருகை தந்தார். அங்குள்ள வ.உ.சி துறைமுக வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, 17 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கும் அடிக்கல் நாட்டினார்.

 

ஹைட்ரஜன் மூலமாக இயங்கும் உள்நாட்டு நீர்வழிக் கப்பலின் இயக்கத்தையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தை தூத்துக்குடி எழுதி வருவதாகக் கூறினார். தூத்துக்குடியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் நாடு முழுவதும் வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும் என்றும் புதிதாக தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் குறிப்பிட்டார்.

 

வளர்ச்சி அடைந்த இந்தியாவில் தமிழகம் முக்கிய பங்கு வகித்து வருவதாகக் கூறிய பிரதமர் மோடி, மத்திய அரசின் திட்டங்களால் தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சி அடைந்து உள்ளதாகவும், தமிழகத்திற்கு மத்திய அரசு செய்யும் திட்டங்கள் மறைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.காங்கிரஸ் ஆட்சியின் போது கோரிக்கைகளாக இருந்தவை அனைத்தும் தற்போது நிறைவேற்றப்பட்டுவதாக பிரதமர் மோடி கூறினார்.

 

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு நினைவுப்பரிசாக வெள்ளி செங்கோல் வழங்கப்பட்டது.காங்கிரஸ் ஆட்சியின் போது கோரிக்கைகளாக இருந்தவை அனைத்தும் தற்போது நிறைவேற்றப்பட்டுவதாக பிரதமர் மோடி கூறினார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு நினைவுப்பரிசாக வெள்ளி செங்கோல் வழங்கப்பட்டது.

 

இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய அமைச்சர்கள் சர்பானந்த சோனாவால், எல்.முருகன், கனிமொழி எம்.பி, அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் உரையாற்றும் முன்பாக பேசிய பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய அமைச்சர்களின் பெயரை குறிப்பிட்ட நிலையில், திமுக எம்.பி. கனிமொழி மற்றும் அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரின் பெயரை தவிர்த்தார்.

 

இதையடுத்து நெல்லையில் நடைபெற்ற பாஜகவின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, “மத்திய அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டி உரிமை கொண்டாடுகிறது திமுக என குற்றம்சாட்டினர்.

 

மேலும் சீனா கொடி, சீனா ராக்கெட்டை வைத்து விளம்பரம் செய்கிறது திமுக. இந்தியாவின் மீது திமுகவிற்கு உள்ள பற்று என்ன என்பதை இந்த விளம்பரமே காட்டுகிறது” என்று கடுமையாக விமர்ச்சித்தார்.“குடும்ப அரசியலில் ஈடுபட்டு வருபவர்களுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள். குடும்ப அரசியல் செய்பவர்களுக்கு அவர்களது பிள்ளைகள்தான் முக்கியம். எனக்கோ நீங்கள்தான் குடும்பமே” என்றும் அவர் தெரிவித்தார்.

Right Menu Icon