--- --:--:-- --

தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் குவிந்த பக்தர்கள்

8b358980-8cd0-4518-98d0-143643c90443

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் தமிழர்கள் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும்,பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.தமிழர்கள் தங்களது வீடுகளில் முக்கனிகள்,பணம் மற்றும் பொருட்களைக்கொண்டு தங்களது வீடுகளில் படையலிட்டு கடவுளை வணங்கினால் நீண்ட ஆயுளும்,செல்வ வளமும் கிடைக்கும் என்பதற்காக மக்கள் தங்களது வீடுகளில் படையலிட்டு வணங்கி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டியில் பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வனபத்ர காளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.தமிழ் புத்தாண்டை கொண்டாடும் விதமாக இக்கோவிலில் அதிகாலை முதற்கொண்டே பக்தர் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து அம்மனை தரிசித்து சென்றனர்.அதற்காக இக்கோவிலில் சிறப்பு வழிபாடும்,பூஜையும் நடைபெற்றது.வழிபாட்டிற்காக கோவை,திருப்பூர்,நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்,வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசித்து அருளாசி பெற்றுச்சென்றனர்.கூட்டம் அதிகமாக இருக்கும் காரணத்தால் பக்தர்களின் பாதுகாப்பிற்காக காவல் துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

-கோவை விஜயகுமார்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon