சித்திரை திருவிழாவிற்கான பணிகள் மும்முரம் – கலெக்டர் ஆய்வு
சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வருகிற 1-ந்தேதி நடைபெறுகிறது. வைகை அணையின் சிறிய மதகுகள் வழியாக நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. வினாடிக்கு 500 கன அடி வீதம், வருகிற 29-ந்தேதி வரை 6 நாட்கள் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
இதன்மூலம் மொத்தம் 170 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை சித்திரை திருவிழாவிற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், பக்தர்களுக்கு தேவையான வசதிகள் குறித்தும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அம்மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.





