வங்கி முன்பாக சுமைதூக்குவோர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பாரத ஸ்டேட் வங்கி முன்பு சுமைதூக்கும் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் தாலுகா உறுப்பினர் நாகநாதன் தலைமையில், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்துராமன் சிறப்புரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கும் விதமாக வருமான வரி செலுத்தாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் 7,500 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் விவசாயம் பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும், தொழிலாளர் நலவாரியத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்வதை எளிமைப்படுத்த வேண்டும், 100 நாள் வேலை வாய்ப்பை 200 நாளாக உயர்த்தி முழு ஊதியம் வழங்க வேண்டும், பெட்ரோல் டீசல் விலையை உயர்த்துவதை நிறுத்த வேண்டும், என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர் .
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். முடிவாக சுமைதூக்கும் தொழிலாளர் நலச் சங்க செயலாளர் பாண்டி நன்றி கூறினார் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






