--- --:--:-- --

விஜய், சூர்யா குடும்பத்தின் மீது அவதூறு பரப்பும் மீரா மிதுனுக்கு பாரதிராஜா கண்டனம்..!

1

டிகர் விஜய் மற்றும் சூர்யாவின் குடும்பங்களை இகழ்வது ஏற்கத்தக்கது அல்ல என இயக்குனர் பாரதிராஜா நடிகை மீரா மீது மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கவர்ச்சிகரமான சினிமா துறையில் பெயர் கெட்டு விடாத வகையில் விஜய், சூர்யா வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டிருக்கிறார்.

 

பல குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் பணியை சூர்யா செய்வதாகவும், சத்தமே இல்லாமல் மனிதாபிமான பணிகளை விஜய் தொடர்வதாகவும் பாரதிராஜா அறிக்கையில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

 

சக கலைஞர்களின் குடும்பத்தை அவதூறாகப் பேசியது குறித்து நடிகர் சங்கம் உள்ளிட்ட திரைத்துறையில் உள்ள சங்கங்கள் குரல் எழுப்பாதது ஏன் எனவும் அவர் வினவியுள்ளார். முன்னதாக திரைத்துறையில் நெபோட்டிசம் எனும் வாரிசுகளின் ஆதிக்கம் தொடர்வதாக விஜய் மற்றும் சூர்யா மீது நடிகை மீரா மிதுன் குற்றம் சாட்டியிருந்தார்.

 

மேலும் அவர்களின் குடும்பத்தினர் குறித்தும் விமர்சனங்களை அவர் முன்வைத்த நிலையில் பாரதிராஜாவின் கண்டன அறிக்கை வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon