ஒரே பள்ளியில் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று..!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஒரே பள்ளியில் படிக்கும் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அங்கிருக்கும் 72 மாணவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டது.
19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பள்ளி வளாகம், பாதிக்கப்பட்ட மாணவர்கள் வசிக்கும் இடங்களில் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.





