டிஎஸ்பிக்கு வழிவிடாத பேருந்து சிறைபிடிப்பு..!
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் டிஎஸ்பிக்கு வழிவிடாத பேருந்து சிறைபிடிக்கப்பட்டு பயணிகள் பேருந்தில் மாற்றப்பட்டு நகரில் தனியார் பேருந்து சாலை நடுவே நின்று பயணிகளை ஏற்றிய போது பேருந்தின் பின்னால் சாத்தூர் டிஎஸ்பியின் வாகனம் வந்ததாக கூறப்படுகிறது.
சாலையில் ஆங்காங்கே பெரிய குழிகள் இருந்ததால் வாகனம் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக பேருந்தை நிறுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டு பயணிகளுடன் பேருந்து சிறைபிடிக்கப்பட்டது. இதனால் மீண்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் போலீசார் பயணிகளை வேறு பேருந்துக்கு மாற்றினர்.





