நடிகர் சரத்குமாருக்கு கொரொனா தொற்று உறுதி : ராதிகா டிவீட்
Actor R Sarathkumar at Tamil Film Industry Hunger Strike
நடிகர் சரத்குமாருக்கு கொரொனா தொற்று உறுதியாகி இருப்பதாக அவரது மனைவி ராதிகா தகவல் தெரிவித்திருக்கிறார். சரத்குமாருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு தற்போது ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்திருக்கிறார்.
தெலுங்கு படப்பிடிப்புக்காக அவர் ஐதராபாத் சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் படப்பிடிப்பிற்கு முன்னதாக அங்கு வருபவர்கள் அனைவரும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி கொரொனா பரிசோதனை செய்ததில் சரத்குமாருக்கும் தொற்று உறுதியாகி இருப்பது தெரிய வந்துள்ளது. இது இரண்டு தினங்களுக்கு முன்பாகவே தெரிந்துள்ளது. உடனடியாக அப்போலோ மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.






