--- --:--:-- --

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு..!

1

மிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகம், குஜராத் ஆகிய மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

கடந்த 24 மணி நேரத்தில் மொத்த பாதிப்பில் தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் மட்டும் 86.3% தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எனவே கொரொனா பரவலை தடுக்கும் விதமாக தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் பரிசோதனைகளை அதிகப்படுத்துதல் தொற்று கண்டறியப்பட்டவர்களை தனிமைப்படுத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon