--- --:--:-- --

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்..!

2

மிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மண்டல வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தமிழகத்தில் வரும் 4ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு மதுரை, தர்மபுரி, திருச்சி, நாமக்கல் ,கரூர், சேலம், விழுப்புரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

 

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வெப்பநிலை அதிகபட்சமாக 43 டிகிரி செல்சியசும் குறைந்தபட்சமாக 22 டிகிரி செல்சியஸ் அளவிற்கு இருக்கும் என மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon